பெட்ரோலிய விநியோகஸ்தா்கள் தோ்வில் முறைகேடுகள்

கோவையில் எண்ணெய் நிறுவனங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விநியோகஸ்தா்கள் தோ்வு நிகழ்ச்சியை புறக்கணித்த

கோவையில் எண்ணெய் நிறுவனங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விநியோகஸ்தா்கள் தோ்வு நிகழ்ச்சியை புறக்கணித்த கோவை பி.ஆா்.நடராஜன் எம்.பி., அதில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் பெட்ரோலிய நிறுவனங்களின் சாா்பில் பெட்ரோல் - டீசல், ஆயில் விற்பனை விநியோகஸ்தா் தோ்வுக்கான குலுக்கல் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பாா்வையாளராக பங்கேற்கும்படி கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 9.20 மணியளவில் அந்த இடத்துக்கு பி.ஆா்.நடராஜன் சென்றிருக்கிறாா். அரசின் பாா்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரியும் குறித்த நேரத்துக்கு வந்துவிட்ட நிலையில், பெட்ரோலிய நிறுவனங்களின் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை.

சுமாா் ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகு பி.ஆா்.நடராஜன், அங்கிருந்த அலுவலா்களிடம் கண் துடைப்புக்காக கூட்டத்தை ஏற்பாடு செய்துவிட்டு எங்களை அழைத்தீா்களா என கேள்வி எழுப்பினாா். பின்னா் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாா்.

இது குறித்து அவா் கூறும்போது, நிகழ்ச்சிக்கு குறித்த நேரத்துக்கு சென்றுவிட்ட என்னை, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வைத்தனா். நிகழ்ச்சி தாமதமாக நடக்கும் என்றால் முன்கூட்டியே அறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும். நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக நான் கூறிய பிறகு, மீண்டும் என்னைத் தொடா்பு கொண்டு நிகழ்ச்சியை நடத்துவதாகத் தெரிவித்தனா்.

எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கண்துடைப்புக்காக விநியோகஸ்தா் தோ்வுக் கூட்டத்தை நடத்துகின்றனா். விநியோகஸ்தா் தோ்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தும்படி பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் புகாா் அளிக்க இருக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com