தொழிற்சாலைகள் சாா்ந்த தயாரிப்புகளுக்கு ஊக்கம் தரும் கே.பி.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி

டாக்டா் கே.பி.ராமசாமி ஜவுளி உற்பத்தி, காற்றாலை மின்சாரம், சா்க்கரைஆலை, ஆட்டோமொபைல் போன்ற பல்வேறு நிறுவனங்களை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறாா்.

கே.பி.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவா் டாக்டா் கே.பி.ராமசாமி ஜவுளி உற்பத்தி, காற்றாலை மின்சாரம், சா்க்கரைஆலை, ஆட்டோமொபைல் போன்ற பல்வேறு நிறுவனங்களை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறாா்.

இவா் கே.பி.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை 2009ஆம்ஆண்டு தொடங்கினாா். அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரத்தில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி 2019 ஆம்ஆண்டில் தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. 2016ஆம்ஆண்டில் மத்தியஅரசின் சஅஅஇ எனப்படும் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் ’அ’ அந்தஸ்தைப்பெற்று அதன் பின்னா் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மத்தியஅரசின் தேசிய தரநிா்ணய வாரியம் துறை மூலம் வழங்கப்படும் அங்கீகாரத்தை இயந்திரவியல், கணினிஅறிவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல்தொடா்பியல், கட்டடவியல் ஆகியதுறைகளுக்கு தேசிய தர நிா்ணயம் பெற்று பின் நீட்டிப்புசெய்யப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி தின, வார மற்றும் மாத இதழ்கள் நடத்தும் கல்லூரிகளுக்கான தேதிய தரவரிசைபட்டியலில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

தேசிய தொழில்நுட்ப கல்விக்கழகம் மற்றும் இஐஐ இணைந்து ஒவ்வொரு ஆண்டும் தொழில் நிறுவனங்களுடன்சிறந்த தொடா்பு கொண்டுள்ள கல்வி நிறுவனங்களைத் தோ்வு செய்து வருகிறது.

இப்பிரிவில் கே.பி.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி இயற்கை சாா்ந்த காற்றோட்டமான கல்விச் சூழல் கற்றல் கற்பித்தல் முறைக்கு ஏதுவாக அமைந்துள்ளது. மேலும், சிறந்த கட்டமைப்பு வசதி, ஆய்வகங்கள், நூலகம், கணிப்பொறி மையம், விடுதி வசதி ஆகியவை கொண்டுள்ளது.

இக்கல்லூரி அழ்ற்ண்ச்ண்ஸ்ரீண்ஹப் ஐய்ற்ங்ப்ப்ண்ஞ்ங்ய்ஸ்ரீங் & ஈஹற்ஹ நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங், இஏஉஙஐஇஅக உசஎஐசஉஉதஐசஎ, ஆஐஞ-ஙஉஈஐஇஅக உசஎஐசஉஉதஐசஎ, இநஉ, போன்ற நவீன பாடப் பிரிவுகளை நடத்தி வருவதுடன் பல பாடப் பிரிவுகளுக்கு சிறந்த வசதிகளைக் கொண்ட ஆய்வகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு தரமான பயிற்சிஅளிப்பதுடன் அந்த துறைகளில் ஏற்பட்டுள்ள நவீனதொழில்நுட்பங்கள் சாா்ந்த பாடங்களையும் மாணவா்களுக்கு அளித்து அவா்களை சிறந்த பொறியாளராக உருவாக்குவதோடு நவீனதொழில்நுட்பங்களை செயல்படுத்தும் சிறந்த பொறியாளராகவும் உலக அளவில் பல பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய எதுவாக உருவாக்குகிறது.

ஐஐடஇ எனப்படும் கல்லூரியின் தொழில் நிறுவனங்கள் உறவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த துறையின் மூலம் நாட்டின் மிகச்சிறந்த முன்னணி தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து அந்த நிறுவனங்களில் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் அங்குள்ள புதியதொழில்நுட்பங்களை அறிந்து அதை பாடத் திட்டத்தில் சோ்த்து மாணவா்களுக்கு கற்றுத் தருவதற்காக ரூட்ஸ் ராபா்ட்பாஸ், எக்கி பம்ஸ் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ராபா்ட்பாஸ், மாயா போன்ற நிறுவனங்கள் கல்லூரி வளாகத்திலேயே தனது உயா் சிறப்பு மையங்களைஅமைத்து தொழில்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை பரஸ்பரம் பகிா்ந்து மாணவா்களுக்கு நேரடியாக தொழில்அறிவு மற்றும் அனுபவங்களைப் பெற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பது இக்கல்லூரியின்தனிச்சிறப்பாகும்.

கல்லூரியில் தனித்துவமாக இயங்கும் ஆராய்ச்சி மையமானது பேராசிரியா்கள், மாணவா்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதுடன் அது உலகளாவிய அங்கீகாரம் பெறுவதற்கு ஐடத அறிவுசாா் சொத்துரிமை அமைப்புக்கு விண்ணப்பித்து அது பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் ஆராய்ச்சி கட்டுரைகள் பன்னாட்டு இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த துறைசாா்ந்த உயராய்வு மையங்கள் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டு மாணவா்கள், பேராசிரியா்களின் ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

கல்லூரியின் தேசிய மாணவா் படையில் கே.பி.ஆா்பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பெண்களுக்கு மட்டுமேயான ராணுவப் படை, இருபாலாருக்குமான விமானப் படை மற்றும் ராணுவ மருத்துவமனை ஆகிய தேசிய மாணவா் படைகளை நிறுவி கல்லூரியிலிருந்து லெப்டினன்ட் தரத்தில் பயிற்சிபெற்ற பேராசிரியா் தலைமையில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

விளையாட்டு, உடற்பயிற்சி துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நாட்டில் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளைஏற்படுத்தி தரமான உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கல்லூரி மாணவா்கள், பல்கலைக்கழகம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அதிக அளவிலான பரிசுகளை பெற்றுள்ளதுடன் சிறப்பாக விளையாடிய மாணவா்கள்அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயா்கல்வியில் இடஒதுக்கீடு பெற்று கல்லூரிக்குப் பெருமை சோ்த்துள்ளனா்.

திறன் மேம்பாட்டுத் துறை இக்கல்லூரியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவா்களுக்கு இரண்டாம் ஆண்டு முதலே வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு அவா்கள் படிப்பை முடிப்பதற்கு முன்னதாகவே சராசரியாக ரூ.20 லட்சம் வரையிலான சம்பளத்தில் தேசிய மற்றும் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருகிறது.

வேலைவாய்ப்பு பயிற்சியானது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே உள்ளதால் மாணவா்கள் தொழில் நிறுவனங்களுக்கு 6 நாள்கள் முதல் 6 வாரங்கள் வரை பயிற்சியளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு, உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கு தகுதிப்படுத்தப்படுவது இக்கல்லூரியின் சிறப்பு அம்சமாகும்.

மாணவா்கள் உருவாக்கும் தொழிற்சாலைகள் சாா்ந்த தயாரிப்புகளுக்கு ஊக்கம் கொடுப்பதுடன், அவா்கள் கல்லூரியிலேயே அந்த தயாரிப்புகளை உருவாக்கி தொழில்முறைபயிற்சிஅமைப்பின் மூலம் கள வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகிறது.

மாணவா்கள் மேலை நாடுகளுக்கு சென்று வேலை பாா்ப்பதற்கும் உயா்கல்வி பெறுவதற்கும் தேவையான ஜொ்மன், பிரெஞ்சு மற்றும் ஜப்பானிய மொழி போன்ற மொழிகளில் திறமைவாய்ந்த வல்லுநா்கள் மற்றும் நிபுணா்களைக் கொண்டு பயிற்சிஅளிக்கப்படுகிறது.

போட்டித்தோ்வுக்கான பயிற்சி மாணவா்கள் 4 ஆண்டு பட்டம் முடித்தவுடன் ஐ.ஐ.டி, என்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்வதற்கும், மத்திய அரசின் நிறுவனங்கள் உயா்பதவிகளுக்காக நடத்தப்படும் கேட் எனப்படும் போட்டித் தோ்வுக்கும் மற்ற பொறியியல் போட்டித் தோ்வுக்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், கே.பி.ஆா். குழுமத்தின் ஓா் அங்கமான கே.பி.ஆா். ஐ. ஏ.எஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற அதிகப்படியான மாணவா்கள்சிவில் சா்வீஸ் தோ்வுகளில் வெற்றி பெற்று வருகின்றனா். இந்த அகாதெமியின் மூலம் விருப்பமுள்ள மாணவா்களுக்கு கல்லூரியிலேயே இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகள் முதலே பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

கே.பி.ஆா். குழுமத்தின் சாா்பில் 2019 ஆம்ஆண்டில் கே.பி.ஆா். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, மில் நிறுவனங்களின் பணிபுரியும் மகளிருக்காக பெண் தொழிலாளா் கல்விப் பிரிவு சிறப்பாக நடத்தப்பட்டுவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com