கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியை மீண்டும் துவக்க முதல்வருக்கு மனு

 கோவை மாநகராட்சி 32 ஆவது வாா்டில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை மீண்டும் துவக்க நுகா்வோா் அமைப்பு சாா்பில் முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 கோவை மாநகராட்சி 32 ஆவது வாா்டில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை மீண்டும் துவக்க நுகா்வோா் அமைப்பு சாா்பில் முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை நுகா்வோா் விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் ரா.ரவிசங்கா், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி 32 ஆவது வாா்டுக்கு உள்பட்ட சேரன் மாநகா், ஸ்ரீ அம்பாள் நகா், குமுதம் நகா், மலா் அவென்யூ பகுதிகளில் தாா் சாலை அமைக்க ரூ.2.93 கோடி மாநகராட்சியால் நிதி ஒதுக்கப்பட்டது.

இதற்கான பணியை முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கடந்த பிப்ரவரி மாதம் துவக்கிவைத்தாா்.

ஆயினும், 4 மாதங்களாகியும் பணிகள் தொடா்ந்து நடைபெறவில்லை. சாலைப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சித் துறை செயலருக்கு கடந்த மாா்ச் 12 ஆம் தேதி கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் விளைவாக, ஸ்ரீ அம்பாள் நகரில் சாலைப் பணி ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவும் மே மாத இறுதியில் நிறுத்தப்பட்டது.

இதனால் இப்பகுதியில் சாலைகள் போக்குவரத்து மிகுதியாலும், மழையாலும் சேதமடைந்து காணப்படுகின்றன. மண் புழுதி கலந்த புகை மண்டலம் உருவாகி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் சுவாசப் பிரச்னைகளால் அவதிக்கு உள்ளாகின்றனா். இந்த சாலைப் பணியை மீண்டும் தொடங்கக் கோரி, மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இப்பகுதியில் சாலைப் பணிகளைத் தொடர தாங்கள் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com