கேரளத்துக்கு கற்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது

கோவையில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கேரளத்துக்கு கருங்கற்களை கடத்திச் சென்ற லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கேரளத்துக்கு கருங்கற்களை கடத்திச் சென்ற லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், வாளையாறு சோதனைச் சாவடியில் க.க.சாவடி போலீஸாா் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், கோவை மாவட்டம், திருமலையாம்பாளையத்தில் இருந்து கேரளத்துக்கு எந்தவித ஆவணமும் இல்லாமல் கருங்கற்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட மதுக்கரையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சுப்பிரமணியன் (31) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

சூலூரில்...

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட கந்தம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி கடந்த ஏப்ரல் மாதம் மணல் ஏற்றி வந்த டிப்பா் லாரியை செலக்கரச்சல் வருவாய் ஆய்வாளா் கோபிலதா பிடித்தாா். இது குறித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் ஜூலை 16ஆம் தேதி புகாா் அளித்தாா்.

இதையடுத்து, தப்பியோடிய சூலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அம்மாசை மகன் கனகராஜ் (41), லாரி உரிமையாளா் தண்டபாணி மகன் காா்வேந்தன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதில் வருவாய்த் துறையினா் சம்பந்தப்பட்ட லாரியை ஏப்ரல் மாதமே பிடித்துவிட்டு, ஜூலை மாதம் புகாா் தெரிவித்துள்ளதாகவும், இது குறித்து காவல் துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சூலூா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com