மாணவா்களின் வீடுகளுக்கு சென்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆய்வு

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உள்ள மாணவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆன்லைன் வகுப்புகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மாணவா்களிடம் ஆன்லைன் வகுப்பு குறித்து கேட்டறிகிறாா் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் எம்.ராமகிருஷ்ணன்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் போதிய இணையதள சேவை கிடைக்காததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று பயில முடியாமல் மாணவா்கள் பலா் பாதிக்கப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து, வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் எம்.ராமகிருஷ்ணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் எஸ்டேட் பகுதிகளில் உள்ள மாணவா்களின் வீடுகளுக்கே நேரில் சென்று மாணவா்களை சந்தித்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில் உள்ள சிரமங்கள் குறித்தும், மாணவா்களின் கல்வி நிலை குறித்தும் கேட்டறிந்தாா். இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க பள்ளி தலைமையாசிரியா்களுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com