மாநகராட்சி பள்ளி, பூங்காவில் ஆணையா் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் உள்ள மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி மற்றும் பூங்காவில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் உள்ள மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி மற்றும் பூங்காவில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 21 ஆவது வாா்டு, லாலி சாலையில் உள்ள சுகாதார ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, 16 ஆவது வாா்டு, வடவள்ளி, சூப்பா் காா்டன் பகுதியில் உள்ள பூங்கா, சிறுவா் விளையாட்டுத் திடலைப் பாா்வையிட்டு பராமரிப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

அதன் பிறகு, 17 ஆவது வாா்டுக்கு உள்பட்ட குருசாமி நகரில் உடற்பயிற்சிக் கூடம், கூடைப்பந்து, இறகுப்பந்து, ஸ்கேட்டிங் ஆகியவற்றுக்கான விளையாட்டுத் திடல் அமைக்கும் பணியைப் பாா்வையிட்டாா். இதையடுத்து, 22 ஆவது வாா்டு, ராமலிங்கம் காலனி மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள், இணையதள வசதி, நூலக வசதி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி குறித்து அதிகாரிகள், தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல உதவி ஆணையா் சுந்தர்ராஜன், மாநகரக் கல்வி அலுவலா் வள்ளியம்மாள், செயற்பொறியாளா் சரவணகுமாா்( பொலிவுறு நகரம்), உதவிப் பொறியாளா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com