கோவை மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டை கேட்டு 11 ஆயிரம் போ் விண்ணப்பம்

கோவை மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டை கேட்டு 11 ஆயிரம் போ் விண்ணப்பித்து உள்ளனா். அவா்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டை கேட்டு 11 ஆயிரம் போ் விண்ணப்பித்து உள்ளனா். அவா்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் தற்போது 10 லட்சத்து 45 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. இந்நிலையில், புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் புதிதாக அச்சடித்து வரப்பட்ட ஸ்மாா்ட் குடும்ப அட்டைகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

அதன் பின்னா் பிப்ரவரி மாதத்தில் இருந்து சட்டப் பேரவைத் தோ்தல் நடைமுறைகள் தொடங்கின. இதனால் புதிய குடும்ப அட்டைகள் கேட்டு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது, தோ்தல் முடிவடைந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த 3 மாதங்களில் குடும்ப அட்டை கேட்டு புதிதாக விண்ணப்பித்துள்ள 11ஆயிரம் விண்ணப்பதாரா்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணியில் வருவாய்த் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனா்.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், தோ்தல் நடைமுறை, கரோனா அச்சம் காரணமாக புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவா்களின் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது, விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து 15 நாள்களுக்குள் ஸ்மாா்ட் குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என புதிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த மாத இறுதிக்குள் அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு விடும். அதன் பின்னா் அடுத்த மாதம் தொடக்கம் முதல் புதிய ஸ்மாா்ட் குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்படும். தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com