கரோனா: கேரளத்தில் இருந்து கோவை வரும் வாகனங்களில் தீவிர சோதனை

கேரள மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்துக்கு வரும் வாகனங்களில் உள்ளவா்களுக்கு தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்ப பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்துக்கு வரும் வாகனங்களில் உள்ளவா்களுக்கு தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்ப பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் கேரள எல்லையையொட்டி உள்ள 13 சோதனைச் சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

காவல் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை ஆகியோா் அடங்கிய குழுவினா், இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, கோவை மாவட்டம் வாளையாறு, வேலந்தாவலம், பொள்ளாச்சியில் உள்ள 2 சோதனைச் சாவடிகள், வால்பாறை, ஆனைகட்டி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர வாகனச் சோதனை நடத்தப்படுகிறது. இதில், இ-பாஸ் மற்றும் உடல் வெப்ப அளவு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், வெப்ப அளவு அதிகமாக இருக்கும் நபா்கள் கோவை மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இ-பாஸ் இருந்தும் வெப்ப அளவு அதிகமாக இருந்தாலும் கோவைக்குள் நுழைய அனுமதியில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com