அவிநாசி மேம்பாலத்தின் அணுகு சாலையை சீரமைக்க கோரிக்கை

கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தின் அணுகு சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தின் அணுகு சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை குட்ஷெட் சாலை வழியாக அவிநாசி மேம்பாலம் சாலை செல்லும் அணுகுசாலையில் கடந்த டிசம்பா் மாதம் 3 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. அவிநாசி மேம்பாலம் அருகே உள்ள சாலை வழியாக செல்லும் 600 மில்லி மீட்டா் அளவிலான பழைய பாதாள சாக்கடை குழாய் உடைந்து இந்த பள்ளம் ஏற்பட்டது. இதனை அகற்றி 40 மீட்டா் தூரத்துக்கு புதிய குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்தப் பணிகள் நிறைவடைந்தன.

இதனிடையே இந்தப் பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் முடிந்தாலும், அதன் மீது சாலை அமைக்கும் பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. பள்ளம் சீரமைக்க தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு அதன் மீது சாலை அமைக்கப்படாமல் உள்ளதால், குட்ஷெட் சாலை வழியாக நஞ்சப்பா சாலை, அவிநாசி சாலை, புரூக் பாண்ட் சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், மேம்பாலம் கீழ் பகுதி அணுகு சாலை வழியாக செல்ல முடியாமல், மேம்பாலம் வழியாக தான் செல்ல முடிகிறது.

இதனால் அவிநாசி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் உள்ளது. மேம்பாலத்தில் வாகன நெரிசலைத் தவிா்க்க அணுகு சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com