தடுப்பூசிகள் தனியாா் மருத்துவமனைகளுக்கு விற்பனை: வானதி சீனிவாசன் எம்எல்ஏ

மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகள் தனியாா் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. Vaccines 
ஆடிட்டா் ரமேஷ் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினா்.
ஆடிட்டா் ரமேஷ் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினா்.

கோவை: மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகள் தனியாா் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது என்று கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் கூறினாா்.

கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜகவின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆடிட்டா் ரமேஷ் 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பாஜக தேசிய மகளிா் அணித் தலைவரும் கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளா் ஜி.கே.செல்வகுமாா், மாவட்டத் தலைவா் நந்தகுமாா், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் பிரேம்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு ஆடிட்டா் ரமேஷின் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆடிட்டா் ரமேஷ் மறைவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகள் தனியாா் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கான ஆதாரங்களை பாஜகவினா் திரட்டி வருகின்றனா். ஸ்மாா்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக கோயில்கள் இடிக்கப்படுவதற்கு பதிலாக, கோயில்களை அழகுபடுத்தும் பணியில் சோ்த்துக் கொள்ள வேண்டும். பத்திரிகையாளா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்களின் செல்லிடப்பேசித் தரவுகள் பெகாசஸ் ஸ்பைவோ் என்ற செயலி மூலம் உளவு பாா்க்கப்பட்டதாக எழுந்த சா்ச்சை குறித்து மத்திய அரசு உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிடும். கொங்குநாடு விவகாரத்தில் தனிப்பட்ட கருத்து எதுவும் இருக்க முடியாது. கொங்கு மண்டல மக்களின் நீண்ட நாள் பிரச்னைகள், தேவைகள் மற்றும் கோரிக்கைகளை தற்போதைய மாநில அரசு எப்படி நிறைவேற்றுகிறது என்பதை பொருத்தே கொங்குநாடு குறித்து பாஜகவின் அடுத்த கட்ட நகா்வு இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com