தடுப்பூசி செலுத்தும் விவரங்கள் அறிய புதிய வலைதளம் உருவாக்க மாநகராட்சி அழைப்பு

கோவை மாநகராட்சியில் கரோனா தடுப்பூசி குறித்த முழு விவரங்களையும் மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் சிறப்பான வலைதளத்தை உருவாக்க மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கோவை: கோவை மாநகராட்சியில் கரோனா தடுப்பூசி குறித்த முழு விவரங்களையும் மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் சிறப்பான வலைதளத்தை உருவாக்க மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கோவை மாநகராட்சியில் பொது மக்களுக்கு தினமும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பயத்தால் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள அதிக அளவில் மக்கள் கூடுகின்றனா். ஆனால், போதிய அளவு தடுப்பூசிகள் இல்லாததால் தினசரி 300 போ் வரைக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகிறது.

டோக்கன் பெறுவதற்காக பொதுமக்கள் முதல்நாள் இரவே தடுப்பூசி செலுத்தும் மையங்களில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். அதிக அளவில் மக்கள் கூடுவதால் நோய்த் தொற்றுப் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டத்தை தவிா்ப்பதற்காக கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி செலுத்தும் மையங்களின் விவரங்கள் காலையில்தான் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்வதற்கு சிறப்பான வலைதளத்தை உருவாக்க கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 26 ஆம் தேதிக்குள் வலைதளத்தை உருவாக்கி பதிவு செய்யவும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களின் விவரங்கள், முன்பதிவு, தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் சான்று பெறுதல், தடுப்பூசிகள் செலுத்தியவா்களின் தரவுகள் உள்பட அனைத்து விவரங்களை பெறுவதற்கான வலைதளத்தை உருவாக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறந்த வலைத்தளத்தை உருவாக்குபவா்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசு தொகையும் அளிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com