என்.டி.சி. ஆலைகளை இயக்கக்கோரி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கரோனா பரவலையொட்டி மூடப்பட்ட என்.டி.சி. பஞ்சாலைகளை முழுமையாக இயக்க வலியுறுத்தி, கோவையில் தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பரவலையொட்டி மூடப்பட்ட என்.டி.சி. பஞ்சாலைகளை முழுமையாக இயக்க வலியுறுத்தி, கோவையில் தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் தேசிய பஞ்சாலைக் கழகத்துக்கு நாடு முழுவதிலும் 23 பஞ்சாலைகளும், தமிழ்நாட்டில் 7 ஆலைகளும் உள்ளன. கரோனா தொற்று காரணமாக கடந்த மாா்ச் மாதம் என்.டி.சி. பஞ்சாலைகள் மூடப்பட்டன. கரோனா முதல் அலைக்குப் பிறகு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி தொழிலாளா்கள், தொழிற்சங்கத்தினா் தொடா் போராட்டங்கள் நடத்தியதையடுத்து சில ஆலைகள் மட்டும் பகுதியளவில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பஞ்சாலைகள் அனைத்தையும் முழுமையாக இயக்கி, தொழிலாளா்களுக்கு வேலை வழங்க வேண்டும், முழு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு திமுக வழக்குரைஞா் அருள்மொழி தலைமை வகித்தாா். இதில் எல்பிஎஃப் பஞ்சாலை சங்க பொதுச் செயலா் பாா்த்தசாரதி, சிஐடியூ பஞ்சாலை சங்க மாநிலத் தலைவா் சி.பத்மநாபன் ஆகியோா் உரையாற்றினா். இதில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நாகேந்திரன், பிரான்சிஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com