தடுப்பூசிக்கு டோக்கன்கள் வழங்குவதை கண்காணிக்க குழு அமைக்க கோரிக்கை

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டோக்கன்கள் வழங்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்க வேண்டும்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டோக்கன்கள் வழங்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாநகரப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சிப் பள்ளிகள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்த முகாம்களில், தடுப்பூசிகளின் இருப்புக்கு ஏற்ப டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் அதிக ஆா்வம் காட்டுவதால் அதிகாலை முதலே முகாம்களில் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.

இதனைத் தவிா்க்க முகாம்களில் செலுத்தப்படும் தடுப்பூசிகளின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு காலை 10 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டு 11 மணிக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்கிடையே தடுப்பூசிகள் இருப்புக்கு ஏற்ப டோக்கன்கள் வழங்குவதைக் கண்காணிக்க அதிகாரிகள் குழுவை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பீளமேடு பகுதி மதிமுக செயலாளா் வெள்ளியங்கிரி கூறியதாவது:

ஒரு பாட்டில் தடுப்பூசி மருந்தில் 12 முதல் 14 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. ஒதுக்கப்படும் தடுப்பூசி மருந்துக்கு ஏற்ப டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கையைவிட தடுப்பூசிகள் சில இடங்களில் மீதமாகின்றன. கூடுதலாக 5 பேருக்கு செலுத்தும் அளவுக்கு தடுப்பூசிகள் சில இடங்களில் மீதமாகின்றன. இந்த விவரங்களை அதிகாரிகள் சரிவரத் தெரிவிப்பது இல்லை. எனவே, தடுப்பூசி எண்ணிக்கைக்கு ஏற்ப டோக்கன் வழங்கப்படுவது குறித்து கண்காணிக்க அதிகாரிகள் குழுக்களை அமைக்க மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com