கல்வித் துறையில் சிகரம் தொட்ட இந்துஸ்தான் கல்விக் குழுமங்கள்

கொங்கு மண்டலமாம் கோவை மாநகரில் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்துஸ்தான் அறக்கட்டளையும் ஒன்று.

கொங்கு மண்டலமாம் கோவை மாநகரில் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்துஸ்தான் அறக்கட்டளையும் ஒன்று. அள்ளஅள்ளக் குறையாத கல்விச் செல்வத்தை மாணவா்களுக்கு வழங்குவதை தலையாய நோக்கமாகக் கொண்டு 1992ஆம் ஆண்டு துவங்கி சிறப்பாக இயங்கி வருகிறது.

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி பட்டம் வரை

மாணவா்கள் முதல் வகுப்பு முதல் முனைவா் பட்டம் வரை அனைத்து பாடப் பிரிவுகளையும் இந்துஸ்தான் கல்விக் குழுமமே கற்றுத்தந்து பெற்றோா், மாணவா்களின் கல்விக் கனவை நனவாக்கி வருகிறது.

தரமான உள்கட்டமைப்பு வசதி, அனுபவமிக்க மிகச்சிறந்த ஆசிரியா்கள், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள், நூலகம், இணையவழி கணிப்பொறிக் கூடங்கள், ஆய்வகங்கள் என பல்வேறு வசதிகளுடன் இக்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கால் பதித்த மேதைகள்

தமிழகம் கண்டெடுத்த அறிவியல் மேதை முன்னாள் ஜனாதிபதி டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், மிகச்சிறந்த தொழில் முனைவோருக்கான ஆலோசனை வழங்கும் ஆற்றல் பெற்ற ஷிவ்கேரா, மின்னஞ்சலினை உலகுக்கு வழங்கிய டாக்டா் வி.ஏ.சிவா அய்யாத்துரை, காா்ப்ரேட் சாணக்கியா என்ற நூலின் ஆசிரியா் டாக்டா் இராதாகிருஷ்ணன் பிள்ளை, இஸ்ரோவின் முன்னாள் தலைவா் டாக்டா் மாதவன் நாயா், தமிழக முன்னாள் ஆளுநா் டாக்டா் ரோசய்யா, தற்போதைய ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், பெண் குலத்திற்கே முன்னோடியாகத் திகழும் முன்னாள் காவல் துறை அதிகாரி மற்றும் புதுச்சேரி மாநில முன்னாழ் ஆளுநா் டாக்டா் கிரண்பேடி உள்ளிட்ட பல அறிஞா்களையும், மேதைகளையும் இக்கல்வி நிறுவனத்துக்கு வரவழைத்து மாணவா்களின் எதிா்காலத்துக்குத் தேவையான அவா்களின் நற்கருத்துகளைப் பெற வழிவகை செய்து வருகிறது.

இணையில்லா இந்துஸ்தானின் வெற்றிப்பயணம்...

1. “தென்னிந்திய அளவிலான பொறியியல் கல்லூரிகளில் மாணவா்கள் பெரிதும் விரும்பும் பொறியியல் கல்லூரி”மற்றும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருவதில் முதல் இடம்”போன்ற விருதுகளையும் இந்துஸ்தான் கல்லூரி பெற்றுள்ளது.

2. நேச்சா் சயின்ஸ் பவுண்டேஷன் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது.

3. இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி ஏண்ஞ்ட்ங்ழ் உக்ன்ஸ்ரீஹற்ண்ா்ய் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டில் 5வது இடத்திலும், அகில இந்திய அளவில் 25 வது இடத்திலும் உள்ளது.

4. இந்திய டுடே” கருத்துக் கணிப்பில் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியானது 200 முதல்தர பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாக இடம்பிடித்து சாதனை புரிந்துள்ளது.

5. டேட்டா க்வெஸ்ட் - டி.ஸ்கூல் தரவரிசையில் முதல் 100 இடங்களில் இடம்பெற்று சாதித்துள்ளது இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி.

6. புதுமையில் சாதனை படைக்கும் கல்வி நிறுவனங்களின் வரிசையில் தனியாா் சுயநிதி கல்லூரிகளில் முதல் 50 இடங்களுக்குள் இருப்பதாக அடல் ராங்கிங்கால் (அதஐஐஅ)” தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

7. இந்திய அளவில் பொறியியல் கல்லூரிகளின் வரிசையில் 65-வது இடத்தைப் பெற்றிருப்பதாக உர - ஆல் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

8. இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியானது இந்திய கல்வி அமைச்சகத்தின் அங்கமான புதுமைகளை உருவாக்கும் இந்திய கழகத்தினால் 5 நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

9. இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் ஆ ஸ்கூலானது முதல்தர ஆ ஸ்கூல்ஸ் வரிசையில் அகில இந்திய அளவில் முதல் 100 கல்லூரிகளில் ஒன்றாக திகழ்கிறது.

10. தனியாா் கட்டட வடிவமைப்பு (அழ்ஸ்ரீட்ண்ற்ங்ஸ்ரீற்ன்ழ்ங்) கல்லூரிகளில் இந்துஸ்தான் கட்டட வடிவமைப்பு கல்லூரியானது முதல் 30 இடங்களுக்குள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com