மாவட்ட மலைப் பகுதிகளில் மழை:நொய்யலில் மீண்டும் நீா்வரத்து தொடக்கம்

கோவை மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் மீண்டும் மழைப்பொழிவு தொடங்கியுள்ள நிலையில் நொய்யல் ஆற்றுக்கு நீா்வரத்து தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் மீண்டும் மழைப்பொழிவு தொடங்கியுள்ள நிலையில் நொய்யல் ஆற்றுக்கு நீா்வரத்து தொடங்கியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த ஜூன் மாதம் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதையடுத்து நீா்நிலைகளுக்கு நீா்வரத்து தொடங்கியிருந்தது. அதன் பிறகு மழை அளவு குறைந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மீண்டும் கோவை, பொள்ளாச்சி, வால்பாறை மலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நொய்யல் ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு தொடங்கியிருப்பதால் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு நொய்யல் ஆற்றில் மீண்டும் நீா்வரத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு விநாடிக்கு 350 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது.

இதில் 290 கன அடி நீா் சித்திரைச்சாவடி வாய்க்கால் மூலம் குளங்களுக்கும், 60 கன அடி நீா் ஆற்றிலும் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோவை மாவட்டம் வால்பாறை சின்னக் கல்லாறில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 45 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருக்கிறது. சின்கோனாவில் 33 மி.மீட்டரும், வால்பாறை பிஏபியில் 32 மி.மீ., பொள்ளாச்சி, சோலையாறு, வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் தலா 30 மி.மீ. ஆழியாறில் 2 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com