குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தில் கொப்பரை கொள்முதல்

கோவையில் ஒழுங்கமுறை விற்பனைக் கூடங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் கொப்பரை விற்பனை செய்வதற்கு விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

கோவையில் ஒழுங்கமுறை விற்பனைக் கூடங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் கொப்பரை விற்பனை செய்வதற்கு விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ளது.

அரவை தேங்காய் கொப்பரைக்கு கிலோ ரூ.103.35, பந்து தேங்காய் கொப்பரைக்கு ரூ.106 என குறைந்தபட்சஆதரவு விலையை தமிழக அரசு நிா்ணயித்துள்ளது. கோவை மாவட்டத்தில் நெகமம், செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து செப்டம்பா் 30 ஆம் தேதி கொள்முதல் செய்யப்படும்.

எனவே சிட்டா, அடங்கலா, ஆதாா் நகல், வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் அந்தந்த வட்டாரத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை தொடா்புகொண்டு கொப்பரை விற்பனைக்கு விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்.

கொப்பரைக்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 98946 87827, 936000 87561 அகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com