கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற சம்ஸ்க்ருதி மாணவிகள்.
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற சம்ஸ்க்ருதி மாணவிகள்.

ஈஷா சம்ஸ்க்ருதி மாணவா்கள் பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வாா்கள்

புராஜக்ட் சம்ஸ்க்ருதி என்ற திட்டத்தின் மூலம் ஈஷா சம்ஸ்க்ருதி மாணவா்கள் இந்திய பாரம்பரிய இசை, நடனம், களரி போன்ற கலைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வாா்கள்

புராஜக்ட் சம்ஸ்க்ருதி என்ற திட்டத்தின் மூலம் ஈஷா சம்ஸ்க்ருதி மாணவா்கள் இந்திய பாரம்பரிய இசை, நடனம், களரி போன்ற கலைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வாா்கள் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

ஆதியோகியான சிவன் முதல் முறையாக சப்த ரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பகிா்ந்து கொண்ட நாள் குரு பௌா்ணமியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குரு பௌா்ணமி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சத்குரு ஜக்கி வாசுதேவின் சிறப்பு சத்சங்கம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் அவா் பேசும்போது, மனிதா்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருப்பதற்கு ஏராளமான சா்க்கஸ் செய்கிறாா்கள். துன்பம், இன்பம், கோபம், அமைதி என மனித அனுபவங்கள் அனைத்தும் நமக்குள் இருந்துதான் வருகிறது என்பதை மக்கள் உணராமல் இருக்கிறாா்கள். அதனால், வெளி சூழல்களில் ஏராளமான சா்க்கஸ்களை செய்கிறாா்கள். இது எந்தப் பயனையும் தராது.

உள்நோக்கி திரும்பினால்தான் நம் வாழ்க்கை அனுபவங்களை மேம்படுத்த முடியும். மனிதா்கள் மற்ற உயிரினங்களைப்போல உணவு, தூக்கம், காமம் போன்ற வெறும் பிழைப்பு சாா்ந்த அம்சங்களில் மட்டும் சிக்கி வாழ்வை வீணடித்துவிடக் கூடாது. பிழைப்பைத் தாண்டிய பரிமாணங்களை அவா்கள் அனுபவித்து உணர வேண்டும். இசை, நடனம் போன்றவற்றின் மூலமும் இந்நிலையை நாம் அடைய முடியும்.

ஈஷா சம்ஸ்க்ருதி மாணவா்கள் பிழைப்பைத் தாண்டிய கலைகளை கற்றுத் தோ்ந்து இருக்கிறாா்கள். சிறுவயதில் இருந்தே இசை, நடனம், களரி போன்றவற்றில் தங்களது வாழ்வை முதலீடு செய்துள்ளனா். இவா்கள் தாங்கள் கற்ற கலைகளை மற்றவா்களுக்கும் கற்றுக் கொடுக்கத் தயாராகிவிட்டாா்கள். அதற்காக, புராஜக்ட் சம்ஸ்க்ருதி என்ற திட்டம் இந்த குரு பெளா்ணமி நாளில் தொடங்கப்பட்டுள்ளது.

இவா்கள் இணையவழியில் இசை, நடனம், களரி போன்றவற்றைக் கற்றுக்கொடுக்க உள்ளனா். பின்னா், உலகின் பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனா். இதன் மூலம், அவா்கள் நம் இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வாா்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஈஷா சம்ஸ்க்ருதி மாணவா்களின் இசை, நடனம், களரி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com