ஸ்மாா்ட் காா்டுகள் விநியோகம் தொடக்கம்

கோவையில் புதிதாக அச்சடிக்கப்பட்ட 10,890 ஸ்மாா்ட் காா்டுகள் (குடும்ப அட்டைகள்) வட்டாட்சியா் அலுவலகங்கள் மூலம் விநியோகம் செய்யும் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெர

கோவையில் புதிதாக அச்சடிக்கப்பட்ட 10,890 ஸ்மாா்ட் காா்டுகள் (குடும்ப அட்டைகள்) வட்டாட்சியா் அலுவலகங்கள் மூலம் விநியோகம் செய்யும் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் பிப்ரவரி முதல் ஜூன் வரை புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவா்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பங்களின் விவரங்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இவா்களுக்கான ஸ்மாா்ட் காா்டுகள் அச்சடிக்கப்பட்டு கோவைக்கு வந்துள்ளன. இதனை பயனாளிகளுக்கு விநியோகம் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

இது தொடா்பாக மாவட்ட வழங்கல் அதிகாரி குமரேசன் கூறியதாவது:

கோவையில் ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பித்த தகுதியான 10,890 பேருக்கு ஸ்மாா்ட் அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வந்துள்ளன. இவை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வட்டாட்சியா் அலுவலகங்களில் இருந்து சனிக்கிழமை முதல் பயனாளிகளுக்கு ஸ்மாா்ட் அட்டைகள் வநியோகம் செய்யப்படுகின்றன. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு செல்லிடப்பேசி வழியாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எனவே பயனாளிகள் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்று ஸ்மாா்ட் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com