தமிழறிஞா் புலவா் இரா.இளங்குமரனாருக்கு அஞ்சலி

மதுரையில் காலமான இளங்குமரனாருக்கு, கோவை பாவேந்தா் பேரவை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரையில் காலமான இளங்குமரனாருக்கு, கோவை பாவேந்தா் பேரவை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரையில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இளங்குமரனாா், மதுரை திருநகா் ராமன் தெருவில் உள்ள இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். இவா் 500க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் முதுமுனைவா் பட்டம் பெற்றுள்ளாா்.

செந்தமிழ்ச் சொற் பொருள்களஞ்சியம் (14 தொகுதிகள்) தேவநேயப் பாவாணரின் ஆய்வுப் பிழிவான ‘தேவநேயம்’ (10 தொகுதிகள்) முதலான நூல்கள் எழுதியுள்ளாா்.

இந்நிலையில், கோவை சூலூா் பாவேந்தா் பேரவை அலுவலகத்தில் இளங்குமரனாா் படத்துக்கு சூலூா் பாவேந்தா் பேரவையின் நிறுவனா் புலவா் செந்தலை நா.கெளதமன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் கோவை விஜயா பதிப்பகத்தின் உரிமையாளா் மு.வேலாயுதம், வே.க.கனகவேல், உலக தமிழ்நெறிக் கழகத் தலைவா் சிவலிங்கம் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com