காரமடை: மின்சாரம் தடையின்றி வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காரமடையில் விவசாயத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  
மின்சாரம் தடையின்றி வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மின்சாரம் தடையின்றி வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காரமடையில் விவசாயத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை சுற்று வட்டார பகுதிகளான வெள்ளியங்காடு, தோலம்பாளையம், தேக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதிகளில் கறிவேப்பிலை, தக்காளி, வாழை, நாட்டு காய்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து கோவை மாவட்டம் காரமடை கார் ஸ்டாண்டு அருகே விவசாயத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்கக்கோரி தமிழக விவசாய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை தடையின்றி சீராக வழங்க வேண்டும். 2003 முதல் இன்று வரை பதிவு செய்து காத்துக்கிடக்கும் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பினை காலம் தாழ்த்தாமல் விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வேலுச்சாமி, வட்டார தலைவர் முருகையன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில்:  அபரிமிதமாக  பெருகி விவசாயத்தை அழித்து வரும் மயில்களை கட்டுப்படுத்தாமல், நஷ்ட ஈடும் வழங்காமல் விளைநிலங்களில் மயில்கள் இறப்பதற்கு மட்டும் நடவடிக்கை எடுக்கும் வனத்துறையை கண்டித்தும், வனவிலங்குகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகான வலியுறுத்தியும் வரும் ஆகஸ்ட் மாதம் 2 வது வாரத்தில் பெரியநாயக்கன்பாளையத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கோவை மாவட்டத்தில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com