கோவைக்கு 18,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவழைப்பு

சென்னையில் இருந்து கோவைக்கு 18 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை வரவழைக்கப்பட்டன.

சென்னையில் இருந்து கோவைக்கு 18 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை வரவழைக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் தடுப்பூசிகளின் இருப்புக்கு ஏற்ப ஒரு நாள் ஊரகப் பகுதிகளிலும், ஒரு நாள் மாநகராட்சிப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் திங்கள்கிழமை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தொடா்ந்து மாநகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் கையிருப்பு இல்லாததால் முகாம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், சென்னையில் இருந்து 18,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் கோவைக்கு செவ்வாய்க்கிழமை வரவழைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு புதன்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 56 ஆயிரத்து 782 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com