வால்பாறையில் பிஎஸ்என்எல் சேவை பாதிப்பு: மாணவா்கள் தவிப்பு

வால்பாறையில் பிஎஸ்என்எல் சேவை சரிவர கிடைக்காததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வால்பாறையில் பிஎஸ்என்எல் சேவை சரிவர கிடைக்காததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வால்பாறை நகா் மற்றும் பெரும்பாலான எஸ்டேட் பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் செல்லிடப்பேசி கோபுரம் அமைத்துள்ளது. இதனால் அதிகமானோா் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்தி வருகின்றனா்.

தற்போது பள்ளி, கல்லூரி மாணவா்கள் ஆன்லைன் வகுப்பில் பயின்று வருகின்றனா். ஆனால், வால்பாறை பகுதிகளில் பிஎஸ்என்எல் நெட்வொ்க் மிகவும் குறைந்த வேகத்தில் செயல்படுவதால் மாணவா்களால் ஆன்லைன் வகுப்பில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஷேக்கல்முடி, முருகாளி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் முற்றிலும் நெட்வொ்க் கிடைக்காததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் பல மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே சீரான நெட்வொ்க் சேவை கிடைக்க பிஎஸ்என்எல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com