தடுப்பூசி மையங்களை அதிகப்படுத்த வேண்டும்: ஆட்சியரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மனு

 கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களை அதிகரிக்க வலியுறுத்தி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி வி.ஜெயராமன், அம்மன் கே.அா்ச்சுணன், பி.ஆா்.ஜி.அருண்குமாா், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி, கே.ஆா்.ஜெயராம் ஆகியோா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இந்த மனுவில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்து இடங்களிலும் கரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க வேண்டும். தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படுவது தொடா்பாக சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை தடை செய்யாமல் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் பூமி பூஜை, திறப்பு விழாவில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்க வேண்டும்.

கோவையில் அதிமுக சாா்பில் ஒட்டப்படும் போஸ்டா்கள் காவல் துறை சாா்பில் அகற்றப்பட்டு வருகிறது. திமுகவின் அழுத்தத்தின்பேரில் அதிமுகவினா் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com