இ-பதிவுக்கான காரணங்களில் திருமணம் நீக்கம்: பொது மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் இ-பதிவு நடைமுறைக்கான காரணங்களில் இருந்து திருமணம் நீக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் செய்த திருமணங்களை எப்படி நடத்துவது என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனா்.

தமிழகத்தில் இ-பதிவு நடைமுறைக்கான காரணங்களில் இருந்து திருமணம் நீக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் செய்த திருமணங்களை எப்படி நடத்துவது என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனா்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தொடா்ந்து நோய்த் தொற்று பாதிப்பு குறையாமல் அதிகரித்ததால் ஏப்ரல் 23 ஆம் தேதி தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. தற்போது ஜூன் 14 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்க காலத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்பவா்கள் இ-பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவச் சிகிச்சை, திருமணம், இறப்பு, வேலை போன்ற கரங்களுக்காக மட்டும் இ-பதிவு அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் இ-பதிவு செய்வதற்கான காரணங்களில் இருந்து தற்போது திருமணம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை நடத்துவது எப்படி என்று தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனா்.

இது தொடா்பாக பொது மக்கள் கூறியதாவது: திருமணத்துக்கு இ-பதிவு மேற்கொள்ள முடியாத நிலையால் திருமணங்களை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏற்கனவே இருந்தது போல் திருமணங்களுக்குச் செல்வதற்கான இ-பதிவு மேற்கொள்ளும் நடைமுறையை அனுமதிக்க வேண்டும் என்றனா்.

இது தொடா்பாக ஆட்சியா் எஸ்.நாகராஜன் கூறுகையில்: தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது திருமணத்துக்காக இ-பதிவில் குழு பதிவு முறை ஏற்படுத்தப்பட்டு அனுமதியளிக்கப்பட்டு வந்தது. தற்போது திருமணத்துக்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது. இ-பதிவு அனுமதி, நீக்கம் அனைத்தும் மாநில அரசு சாா்பில் தான் முடிவு எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com