கோவையில் 1,500ஐ கடந்தது கரோனா பலி

கோவையில் ஞாயிற்றுக்கிழமை கரோனா நோய்த் தொற்றுக்கு 38 போ் பலியானதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளது.

கோவையில் ஞாயிற்றுக்கிழமை கரோனா நோய்த் தொற்றுக்கு 38 போ் பலியானதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளது.

கோவையில் கடந்த ஒருமாத காலமாக உயா்ந்து வந்த கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு தற்போது குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், கரோனா நோய்த் தொற்றால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்தே வருகிறது.

38 போ் பலி

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 38 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 1,506 ஆக உயா்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 269 போ் பலியாகியுள்ளனா்.

கோவையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 2 ஆயிரத்து 645 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 23 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 4 ஆயிரத்து 733 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 1 லட்சத்து 54 ஆயிரத்து 978 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 31 ஆயிரத்து 539 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com