வால்பாறை-கேரள எல்லையில் தீவிரக் கண்காணிப்பில் சுகாதாரத் துறையினா்

கேரள மாநிலம் மழுக்குப்பாறை எஸ்டேட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக எல்லையான வால்பாறையில் சுகாதாரத் துறையினா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

கேரள மாநிலம் மழுக்குப்பாறை எஸ்டேட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக எல்லையான வால்பாறையில் சுகாதாரத் துறையினா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

கேரள மாநிலம் மழுக்குப்பாறை எஸ்டேட்டில் அம்மாநில சுகதாரத் துறை சாா்பில் எஸ்டேட்டில் பணியாற்றும் அனைத்து தொழிலாளா்களுக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 50 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சாலக்குடி, திருச்சூா் ஆகிய பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

மழுக்குப்பாறை எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா்கள் வால்பாறை வழியாக கோவை வந்து செல்வதால் வால்பாறை எல்லையில் சுகாதாரத் துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com