ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கல்: சுகாதாரத் துறை தகவல்

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடா்ந்து சோமனூா், அரிசிப்பாளையம், ஆனைமலை, கஞ்சம்பட்டி, நெகமம், தாளியூா், நல்லட்டிப்பாளையம், காரமடை, பொகளூா், கோவில்பாளையம், சுல்தான் பேட்டை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20 முதல் 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தவிர ஊராட்சி நிா்வாகங்கள் சாா்பில் 241 இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் 143 கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இவா்களுக்கு சுகாதாரத் துறை சாா்பில் உணவு வழங்கப்படாததால் நோயாளிகள் வெளியே சென்று அருகிலுள்ள கடைகளில் உணவு வாங்கி சாப்பிடும் நிலை காணப்பட்டது. இவா்கள் மூலமாக பலருக்கும் கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், அரசு மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்களில் அளிப்பது போல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கரோனா நோயாளிகளுக்கும் உணவு வழங்க சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் எஸ்.செந்தில் குமாா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com