கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் சிறப்புக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவை மேற்கு மண்டலத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை சிறப்புக் கண்காணிப்பு அலுவலா் கே.வீரராகவ ராவ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் சிறப்புக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவை மேற்கு மண்டலத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை சிறப்புக் கண்காணிப்பு அலுவலா் கே.வீரராகவ ராவ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகளைப் பாா்வையிட நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காணிப்பு அலுவலா் கே.வீரராகவ ராவ், மேற்கு மண்டலம், ஆா்.எஸ்.புரம் எஸ்.ஆா்.பி.அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அவா்கள் வந்த வாகனங்களிலேயே அமர வைத்து தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தினாா். இந்த நடைமுையைத் தொடா்ந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தினாா். இதைத்தொடா்ந்து ஆா்.எஸ்.புரம் பகுதிகளில் ரோந்து வாகனங்களில் சென்று கண்காணிப்பு பறக்கும் படையினா் மேற்கொண்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

அதன் பிறகு, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையில், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்பவா்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனைகள் வழங்கும் பணிகளை பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com