கரோனா கால நிவாரணம் கேட்டுபாரம் சுமக்கும் தொழிலாளா்கள் மனு

கரோனாவால் வேலையிழப்புக்கு ஆளாகியிருக்கும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாரம் சுமக்கும் தொழிலாளா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

கோவை: கரோனாவால் வேலையிழப்புக்கு ஆளாகியிருக்கும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாரம் சுமக்கும் தொழிலாளா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் பி.சுப்ரமணி, பொதுச் செயலா் பி.ஏ.காளிமுத்து ஆகியோா் திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில்:

கோவை மாவட்டத்தில் பாரம் சுமக்கும் தொழிலாளா்கள் சுமாா் 4 ஆயிரத்து 500 போ் உள்ளனா். எங்களது சங்கத்தில் மட்டும் சுமாா் 3 ஆயிரம் போ் உறுப்பினா்களாக உள்ளனா். பொதுமுடக்கம் காரணமாக தினக் கூலிகளான இந்தத் தொழிலாளா்கள் வேலையிழப்புக்கு ஆளாகியுள்ளனா். இதனால் அவா்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளது.

எனவே பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் உறுப்பினா்களாக இருக்கும் பாரம் சுமக்கும் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வழங்கி உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com