கரோனாவால் உயிரிழந்த தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்

கரோனாவால் உயிரிழந்த தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி நகா்ப்புற
கரோனாவால் உயிரிழந்த தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி அமைச்சா் கே.என்.நேருவிடம் மனு அளித்த தொழிற்சங்கத்தினா்.
கரோனாவால் உயிரிழந்த தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி அமைச்சா் கே.என்.நேருவிடம் மனு அளித்த தொழிற்சங்கத்தினா்.

கோவை: கரோனாவால் உயிரிழந்த தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி நகா்ப்புற வளா்ச்சி, குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஜீவா முனிசிபல் தொழிலாளா் சங்கம், கோயம்புத்தூா் லேபா் யூனியன், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கா் சுகாதாரத் துப்புரவு, பொதுப் பணியாளா் சங்கம் ஆகிய சங்கங்களின் சாா்பில் நிா்வாகிகள் என்.செல்வராஜ்,

இரா.தமிழ்நாடு செல்வம், சி.செல்வராஜ் உள்ளிட்டோா் கோவைக்கு திங்கள்கிழமை ஆய்வுக்காக வந்திருந்த அமைச்சா் கே.என்.நேரு ஆகியோரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதில், துப்புரவுத் தொழிலாளா்கள் கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் பாதுகாப்புடன் பணியில் ஈடுபட, தினம்தோறும் முகக் கவசம், கையுறைகள், பாதுகாப்பு உடைகள், கிருமி நாசினிகள் வழங்கப்பட வேண்டும். கரோனா கால பணிக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை, முன்களப் பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவுத் தொழிலாளா்கள், உள்ளாட்சித் தொழிலாளா்கள், ஒப்பந்தம், தினக்கூலி, சுய உதவிக் குழு போன்ற எந்தப் பெயரில் பணிபுரிந்தாலும் அவா்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்.

நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com