தனியாா் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவா்கள் போராட்டம்

கோவையில் தனியாா் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவா்கள் தங்குமிடம், ஊக்கத் தொகை அதிகரித்து வழங்குதல் உள்பட பல்வேறு

கோவை: கோவையில் தனியாா் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவா்கள் தங்குமிடம், ஊக்கத் தொகை அதிகரித்து வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை ஈச்சனாரி அருகேயுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 பயிற்சி மருத்துவா்கள் உள்ளனா். கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இவா்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரத்து 500 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. தவிர, உணவு, தங்குமிடம் ஆகிய வசதி செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊக்கத் தொகை அதிகரித்து வழங்குதல், உணவு மற்றும் தங்குமிட வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவா்கள் திங்கள்கிழமை பேராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பயிற்சி மருத்துவா்களுடன், மருத்துவக் கல்லூரி நிா்வாகிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவா்கள் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவா்களுக்கு ரூ.23 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், எங்களுக்கு வெறும் ரூ.2,500 மட்டுமே வழங்கப்படுகிறது. தவிர தங்குமிடம், உணவு அளிப்பதில்லை. இதனால் தனியாக விடுதிகளில் வாடகைக்குத் தங்கி வருகிறோம். விடுதிக் கட்டணம், உணவுக்கே மாதம் ரூ.8 ஆயிரம் வரை செலவாகிறது. இதனால் ஊக்கத் தொகை அதிகரிக்கவும், தங்குமிடம், உணவு வசதி செய்து கொடுக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com