தள்ளுவண்டி உணவகங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்: சாலையோர வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

கோவையில் சாலையோரத் தள்ளுவண்டி உணவகங்களுக்கு அனுமதியளிக்க வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை வைத்துள்ளனா்.

கோவை: கோவையில் சாலையோரத் தள்ளுவண்டி உணவகங்களுக்கு அனுமதியளிக்க வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை வைத்துள்ளனா்.

தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு பிறகு பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டுள்ளது. ஆனால் கோவை, திருப்பூா் உள்பட 11 மாவட்டங்களில் நோய்த் தொற்றுப் பரவல் குறையாததால் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோவையில் மளிகை, இறைச்சிக் கடைகள், உணவகங்கள், காய்கறி கடைகள் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாலையோரத் தள்ளுவண்டி உணவகங்களுக்கும் அனுமதியளிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இது தொடா்பாக கோவை மாவட்ட  சாலையோர  மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச் சங்கத் தலைவா் மணி கூறியதாவது:  கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் 12 ஆயரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளும், மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளும் உள்ளனா். இவா்கள் பெரும்பாலும் காய்கறி, பழங்கள், பூக்கள், சிற்றுண்டி வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளனா்.

பொதுமுடக்கத்தால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சாலையோரக் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாலையோரத் தள்ளுவண்டி உணவகங்களுக்கும் அனுமதியளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com