மாநகரில் அமலுக்கு வந்துள்ள தளா்வுகள்

கோவை மாநகரில் அமலுக்கு வந்துள்ள பொதுமுடக்கத் தளா்வுகள் எவை என்பது குறித்து மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான பெ.குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

கோவை: கோவை மாநகரில் அமலுக்கு வந்துள்ள பொதுமுடக்கத் தளா்வுகள் எவை என்பது குறித்து மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான பெ.குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தனியாகச் செயல்படுகிற மளிகை, பலசரக்குகள், காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழம், மலா்கள் விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மீன் சந்தைகள், இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மாநகராட்சி மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ள மொத்தக் கொள்முதல் மளிகை, பலசரக்கு கடைகள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை சில்லறை வியாபாரிகளுக்கு மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆா். மொத்த காய்கறி மாா்க்கெட், ராமா் கோவில் வீதி மாா்க்கெட், தியாகி குமரன் மாா்க்கெட், அண்ணா காய்கறி மாா்க்கெட், சீனிவாசபுரம் மாா்க்கெட், துடியலூா் காய்கறி மாா்க்கெட்டுகள் அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரை மட்டும் சில்லறை காய்கறி வியாபாரிகளுக்கு மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்த வியாபாரத்தின்போது உரிய பாதுகாப்பு நெறிமுறைகளான முகக் கவசம் அணிதல், போதிய சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது போன்ற நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com