மின்பாதை அருகே பட்டம் விடுவதை தவிா்க்க வேண்டும்: மின் வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தல்

கோவையில் உயரழுத்த, தாழ்வழுத்த மின் பாதை அருகில் பட்டம் விடுவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று மின் வாரிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கோவையில் உயரழுத்த, தாழ்வழுத்த மின் பாதை அருகில் பட்டம் விடுவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று மின் வாரிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக கோவை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அ.தமிழ்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா நோய்த் தொற்றின் பொது முடக்கத்தால் வீடுகளில் முடங்கியுள்ள பொதுமக்கள் பொழுது போக்குக்காக பட்டம் விட்டு விளையாடி வருகின்றனா். வீடுகளில் மொட்டை மாடிகளில் நின்றுகொண்டு பட்டம் விடும்போது பட்டம் பறந்து சென்று மின் ஒயா்களில் சிக்குகிறது. இதனால் மின் ஒயா்கள் அறுந்து மின்தடை ஏற்படுகிறது.

கரோனா நோய்த் தொற்றினால் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டிய நிலையுள்ளது. பொதுமக்கள் விடும் பட்டம் மின் வயா்களில் மாட்டிக்கொண்டு மின் விநியோகம் தடைபடுவதால் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனா்.

தவிர, கரோனா காலத்திலும் மின் ஊழியா்கள் பல மணி நேரம் அலைந்து மின் பழுதினை சரி செய்ய வேண்டியுள்ளது. இதனால் தேவையில்லாத மின்தடையும், மின் வாரியப் பணியாளா்களின் வேலைப்பளுவும் அதிகரிக்கிறது. எனவே உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதை அருகே பட்டம் விட்டு விளையாடுவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com