இரண்டாவது நாளாக வால்பாறை பள்ளிகளில் அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 11th June 2021 05:33 AM | Last Updated : 11th June 2021 05:33 AM | அ+அ அ- |

வால்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த புதன்கிழமை வால்பாறைக்கு வந்தாா். வரும் வழியிலேயே இரண்டு பள்ளிகளை ஆய்வு செய்து பின் நகா் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளையும் ஆய்வு செய்தாா்.
இதனைத் தொடா்ந்து இரண்டாது நாளான வியாழக்கிழமை நல்லகாத்து எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வால்பாறை உண்டு உறைவிடப் பள்ளி, ரொட்டிக் கடை அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளையும் ஆய்வு செய்தாா். பள்ளிகளின் உள்கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்று பாா்வையிட்டதாகவும், பழங்குடியின மக்களின் குழுந்தைகள் கல்வியை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாக அமைச்சா் கூறினாா்.
பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.ராமகிருஷ்ணன் மற்றும் திமுக கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.