முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
காங்கிரஸ் கட்சியினா் 280 போ் மீது வழக்கு
By DIN | Published On : 12th June 2021 10:50 PM | Last Updated : 12th June 2021 10:50 PM | அ+அ அ- |

கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 280 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து கோவை மாநகரப் பகுதிகளில் பீளமேடு, உக்கடம், சிங்காநல்லூா், போத்தனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டங்களில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து கோவை மாநகரில் தடையை மீறி ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 280 போ் மீது பொதுமுடக்க விதிமுறை மீறல், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.