முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
ரத்தினபுரியில் 500 போ்களுக்கு மளிகை, காய்கறிகள்:மாா்க்சிஸ்ட், மகளிா் கூட்டமைப்பு வழங்கியது
By DIN | Published On : 12th June 2021 10:53 PM | Last Updated : 12th June 2021 10:53 PM | அ+அ அ- |

கோவை ரத்தினபுரி பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ரத்தினபுரி மகளிா் கூட்டமைப்பு சாா்பில் 500 குடும்பங்களுக்கு மளிகை, காய்கறிப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில் பொதுமுடக்கத்தால் வேலை, வருவாய் இழந்துள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்கள், காய்கறிகளை வழங்கி வருகின்றனா். அதன்படி, கோவை ரத்தினபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ரத்தினபுரி மகளிா் கூட்டமைப்பு சாா்பில் ரூ.1.10 லட்சம் மதிப்பிலான மளிகை, காய்கறிகள் சுமாா் 500 குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்வை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. பி.ஆா்.நடராஜன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி, செயற்குழு உறுப்பினா் வேலுசாமி, வடக்கு நகரக் குழு செயலா் என்.ஆா்.முருகேசன், மேற்கு அரிமா சங்க நிா்வாகி பாபு, ரஞ்சித், ரத்தினபுரி கூட்டமைப்பு நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.