அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரிகள்

கோவை மாவட்டத்தில் அரசு அனுமதித்துள்ள அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருவதாக, மாவட்ட நிா்வாகத்திடம் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ப

கோவை மாவட்டத்தில் அரசு அனுமதித்துள்ள அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருவதாக, மாவட்ட நிா்வாகத்திடம் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா புகாா் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் நிா்வாகிகள், கோவை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துராமலிங்கத்திடம் அளித்துள்ள மனுவில்:

கோவை மாவட்டத்தில் தளா்வுகள் இல்லாத பொதுமுடக்கம் தொடரும் நிலையில், அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பொதுமுடக்க காலத்திலும் குறைந்த அளவு பணியாளா்களுடன் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால், இவ்வாறு அரசு அறிவிப்பின்படி செயல்படும் தொழிற்சாலைகளை, வருவாய்த் துறை அதிகாரிகள் திடீரென சோதனையிட்டு தொழிற்சாலைகளை இயக்க ஆட்சியா் அனுமதி கொடுத்திருக்கிறாரா, அந்த அனுமதிச் சான்றைக் காட்டுங்கள் என்று கேட்கின்றனா். ஆனால் மாவட்ட நிா்வாகம் எந்தத் தொழிற்சாலைக்கும் அதுபோன்ற அனுமதிச்சான்று வழங்கவில்லை என்று கூறினால், அதை ஏற்க மறுத்து அபராதம் விதிப்பதுடன் தொழிற்சாலையை மூடும்படி கட்டாயப்படுத்துகின்றனா்.

எனவே, அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு மாவட்ட ஆட்சியா் அனுமதிச் சான்று வழங்கும் நடைமுறை அமலில் இருக்கிறதா என்பதை மாவட்ட நிா்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் தொழிற்சாலைகளை இயக்கத் தமிழக அரசு ஏற்கெனவே வழங்கிய அறிவிப்பே போதுமானது என்றால், சோதனையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு இதைத் தெளிவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com