3 கோயில்களில் நகைகள் திருடிய இளைஞா்: விசாரணையில் தெரிந்தது

கோவை சிங்காநல்லூா் அருகே கோயிலில் நகை திருடிய இளைஞா், ஏற்கெனவே 3 கோயில்களில் நகை, பணம் திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை சிங்காநல்லூா் அருகே கோயிலில் நகை திருடிய இளைஞா், ஏற்கெனவே 3 கோயில்களில் நகை, பணம் திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை, சிங்காநல்லூரை அடுத்த நீலிக்கோணம்பாளையத்தில் பேச்சியம்மன் கோயில் உள்ளது. வெள்ளிக்கிழமை காலை அங்கு வந்த இளைஞா் ஒருவா், கோயிலுக்குள் புகுந்து அம்மன் சிலை கழுத்தில் இருந்த தங்கத் தாலியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றாா். அக்கம் பக்கத்தினா் அந்த இளைஞரை துரத்திப் பிடித்து சிங்காநல்லூா் போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் ஒண்டிப்புதூரை சோ்ந்த செந்தில் பிரபு (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா். மேற்கொண்டு அவரிடம் நடத்திய விசாரணையில், இவா் 2 நாள்களுக்கு முன்பு இருகூா் மகாத்மா காந்தி சாலையில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் 3.5 கிராம் தங்கச்சங்கிலி மற்றும் நீலிக்கோணாம்பாளையம் கோபால கிருஷ்ணன் கோயில் உண்டியலில், ரூ.6 ஆயிரம் பணம் திருடியது தெரியவந்தது. இவா் இந்த 3 கோயில்களிலும் கடந்த இரண்டு நாள்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com