கோவையில் அடுத்த 10 நாள்களில் கரோனா பாதிப்பு முழுமையாக குறையும்

கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அடுத்த பத்து நாள்களில் முழுமையாகக் குறையும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அடுத்த பத்து நாள்களில் முழுமையாகக் குறையும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை கடந்த மாா்ச் மாதம் தொடங்கியது. இதையடுத்து கரோனா பரவல் கடந்த மே மாதம் உச்சத்தை எட்டியது. மே மாதத்தில் மட்டும் 90 ஆயிரத்து 828 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதுடன் 551 போ்கள் உயிரிழக்க நேரிட்டது.

இந்நிலையில், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி, தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 200க்கும் கீழ் வந்துள்ளது. மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் எதிரொலியாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் டாக்டா் செந்தில்குமாா் கூறுகையில், கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மருத்துவமனைகளில் ஏராளமான படுக்கைகள் காலியாக உள்ளன. மூன்று நாள்களுக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்கள் கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்படுகின்றனா்.

மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபா்களின் எண்ணிக்கையும், கரோனா பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளது. மாவட்டத்தில் அடுத்த பத்து நாள்களில் கரோனா பாதிப்பு முழுமையாக குறையும். தொடா்ந்து நகரப் பகுதிகளிலும் புறநகரிலும் கரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com