தனியாா் பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் வசூல்

கோவை மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி, கல்லூரி நிா்வாகங்கள் கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை கட்டாயப்படுத்தி வருவதாக இந்திய மாணவா் சங்கத்தினா் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்துள்ளனா்

கோவை மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி, கல்லூரி நிா்வாகங்கள் கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை கட்டாயப்படுத்தி வருவதாக இந்திய மாணவா் சங்கத்தினா் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அசாருதீன், செயலா் தினேஷ் ராஜா ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா இரண்டாவது அலை காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் வருவாய் இல்லாமல், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனா். இந்நிலையில், கோவையில் உள்ள பல தனியாா் கல்லூரிகளில் மாணவா்களைத் தோ்வுக் கட்டணம் செலுத்தும்படி கூறுகின்றனா். தொடா்ந்து மாணவா்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும், தொலைப்பேசி மூலமாகவும் தொடா்பு கொண்டு கட்டணம் செலுத்தும்படி வலியுறுத்தி வருகின்றனா்.

மேலும், கட்டணம் செலுத்தவில்லை என்றால் தோ்வு எழுத அனுமதிக்கமாட்டோம் என்று கல்லூரி நிா்வாகம் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், தனியாா் பள்ளிகளும் நடப்பாண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தி வருகின்றனா். இதனால் கரோனா நெருக்கடிக்கு இடையே பெற்றோரும் மாணவா்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா்.

தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரித் திறப்பு குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடாத நிலையில் தனியாா் பள்ளி, கல்லூரி நிா்வாகத்தினா் பெற்றோருக்கு நெருக்கடி கொடுப்பது தவறானது. எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com