கோவை மாநகராட்சியின் 26வது ஆணையராக ராஜகோபால் சுன்கரா பொறுப்பேற்பு 

கோவை மாநகராட்சியின் 26வது ஆணையாளராக ராஜகோபால் சுன்கரா இன்று பொறுப்பேற்று கொண்டார்.
கோவை ஆணையர் ராஜகோபால் சுன்கரா
கோவை ஆணையர் ராஜகோபால் சுன்கரா

கோவை மாநகராட்சியின் 26வது ஆணையாளராக ராஜகோபால் சுன்கரா இன்று பொறுப்பேற்று கொண்டார். 
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இதற்கு முன்பு தான் கூடுதல் ஆட்சியராகவும் தொழில்துறை துணை செயலாளராகவும் பணியாற்றி உள்ளதாக தெரிவித்தார். 
தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய மாநகராட்சி கோவை எனவும் இங்கு என்னை பணியமர்த்திய முதல்வர் மற்றும் உள்ளாட்சி அமைச்சருக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறினார். கரோனா தொற்று இரண்டாவது அலையில் இருப்பதாகவும் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஐந்நூறுக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார். 
முதல் அலையின் போது கடலூரில் பணியாற்றியதாகவும் இரண்டாவது அலையின் போது சென்னையில் பணியாற்றியதாக தெரிவித்த அவர் மூன்றாம் அலை தொற்று ஏற்பட்டால் அதை சமாளிக்கும் நடவடிக்கைகள் தற்போது இருந்தே எடுக்கப்படும் என கூறினார். இரண்டாவது முக்கிய விஷயமாக சுகாதாரம், சாலை வசதி, தெரு விளக்கு, உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார். 
மூன்றாவது விஷயமாக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் சென்னையை போல ட்விட்டர், பேஸ்புக், போன்ற சமூக வலைதளங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார். தனது தந்தை இறந்த போது இறப்பு சான்றிதல் பெறுவதில் இருந்த சிரமங்களை நினைவு கூர்ந்த அவர் பொதுமக்கள் யாரும் அலைகளிக்கப்பட கூடாது எனவும் குறைகள் தீர்க்கப்படாவிட்டால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். 
கரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்டும் என்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் களுக்கு தேவையான உதவிகள் சென்னை மாநகராட்சியில் உள்ளது போல போகஸ் வாலண்ட்ரியர்கள் மூலம் வழங்கப்படும் என்றார். தொற்று பாதித்தவர்களும் வீட்டைவிட்டு வெளியே வராமல் மாநகராட்சி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com