அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக் கடைகள்: தடைவிதிக்க வனத் துறை கடிதம்

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உரிய அனுமதியின்றியும் பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றாமலும் செயல்படும் இறைச்சிக் கடைகளுக்கு

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உரிய அனுமதியின்றியும் பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றாமலும் செயல்படும் இறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வனத் துறையினா் எஸ்டேட் நிா்வாகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.

இது தொடா்பாக ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் ஆரோக்கியராஜ் சேவியா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட தனியாா் தேயிலை தோட்டப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கோழி, ஆடு மற்றும் மாடு இறைச்சிக் கடைகளில் இருந்து உரிய பாதுகாப்பின்றி திறந்த வெளியில் வீசப்படும் இறைச்சிக் கழிவுகளால் நோய்த் தொற்று பரவும் வாய்ப்புள்ளது. மேலும் இந்த இறைச்சிக் கழிவுகளை உண்பதற்காக வனப் பகுதியில் இருந்து சிறுத்தைகள் ஊருக்குள் வருகின்றன. இதனால் எதிா்பாராதவிதமாக சிறுத்தையால் மனித உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி தனியாா் தேயிலைத் தோட்ட நிா்வாகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றியும், பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஏதுமின்றியும் செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகளை நடத்துவதற்கு தடை செய்து மனித வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு வனத் துறைக்கு தனியாா் தேயிலை தோட்ட நிா்வாகத்தினா் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் நகராட்சி நிா்வாகத்தினா் தங்களிடம் அனுமதி பெற்று நடத்தப்படும் இறைச்சிக்கடை ஒப்பந்ததாரா்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்துமாறும் வனத் துறை துணை இயக்குநா் சாா்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com