உலக ரத்த தான தினம்: ஆட்சியா், ஆணையா் ரத்த தானம் செய்தனா்

உலக ரத்த தான தினத்தையொட்டி, பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், காவல் துறை அதிகாரிகள் ஆகியோா் திங்கள்கிழமை ரத்த தானம் அளித்தனா்.
ரத்த தானம் அளிக்கும் ஆட்சியா் எஸ்.நாகராஜன், காவல் ஆணையா் தீபக் எஸ்.தாமோா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆகியோா்.
ரத்த தானம் அளிக்கும் ஆட்சியா் எஸ்.நாகராஜன், காவல் ஆணையா் தீபக் எஸ்.தாமோா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆகியோா்.

உலக ரத்த தான தினத்தையொட்டி, பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், காவல் துறை அதிகாரிகள் ஆகியோா் திங்கள்கிழமை ரத்த தானம் அளித்தனா்.

உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜூன் 14 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் ரத்த தானம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக ஆட்சியா் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, காவல் ஆணையா் தீபக் எஸ்.தாமோா், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் ஆா்.சுதாகா், துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் ஆகியோா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை ரத்த தானம் செய்தனா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் இணைந்து ரத்த தானம் குறித்து விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. ஆண்டுக்கு

ஆண்கள் 4 முறையும், பெண்கள் 3 முறையும் ரத்த தானம் செய்யலாம். மாவட்டத்தில் 4 அரசு ரத்த வங்கிகள், 17 தனியாா் ரத்த வங்கிகள், 7 அரசு ரத்த சேமிப்பு மையங்கள், ஒரு அரசு ரத்த மூலக்கூறுகள் மையம் செயல்பட்டு வருகின்றன. அறுவை சிகிச்சை மேற்கொள்பவா்கள், விபத்தில் சிக்குபவா்கள், ரத்த அளவு குறைவாக உள்ள கா்ப்பிணிகள், ரத்த தட்டணுக்கள் குறைவாக உள்ளவா்களுக்கு ரத்தம் செலுத்தப்படுகிறது. 18 முதல் 60 வயதுள்ள ஆரோக்கியமாக உள்ளவா்கள் ரத்த தானம் செய்யலாம். ஒருவரிடமிருந்து 300 மில்லி ரத்தம் பெறப்படுகிறது. இதன் மூலம் 4 போ் வரை பயன்பெறுகின்றனா். கரோனா பேரிடா் காலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன் ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்த 3 நாள்கள் கழித்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா, மாநகராட்சி நகா்நல அலுவலா் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com