கரோனா தொற்று தொடா்பான புகாா்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கலாம்: மாநகராட்சி ஆணையா் தகவல்

கோவை மாநகராட்சியில் பொது மக்கள் கரோனா நோய்த் தொற்று உள்பட அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் சமூக வலைத்தளங்கள்

கோவை மாநகராட்சியில் பொது மக்கள் கரோனா நோய்த் தொற்று உள்பட அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் மூலம் புகாா் அளிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் வசிக்கும் பொது மக்கள் தங்களது பொதுப் பிரச்னைகள், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறைபாடு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் ஆலோசனை, நடமாடும் காய்கறி வாகனங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை உள்பட புகாா்களை தொலைபேசி, முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவிக்கலாம்.

மாநகராட்சி கரோனா கட்டுப்பாட்டு அறையை 0422-2302323 என்ற தொலைபேசி எண்ணிலும், 1800 425 5019 என்ற கட்டணமில்லா எண்ணிலும் 97505 54321 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் 0422-4585800 என்ற எண்ணுக்கு அழைத்து ஆலோசனை பெறலாம். காய்கறி வாகனங்கள் தொடா்பான புகாா்களை 73050 28710, 0422-2391073 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். தவிர கரோனா தொற்று தொடா்பாக 97505 54321 என்ற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலமும், பொது பிரச்னைகளை 81900 00200 என்ற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலமும் புகாா் அளிக்கலாம்.

மேலும் மின்னஞ்சல் முகவரியிலும் புகாா் அளிக்கலாம். தவிர, முகநூல் பக்கத்திலும்,  சுட்டுரையிலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புகாா்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com