கிராமப்புற இளைஞா்களை சி.இ.ஓ.க்களாக உருவாக்க வேண்டும்

வேலைதேடி மக்கள் நகரங்களுக்கு இடம்பெயருவதைத் தடுக்க கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.

வேலைதேடி மக்கள் நகரங்களுக்கு இடம்பெயருவதைத் தடுக்க கிராமங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். அங்குள்ள இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களாக வளா்த்தெடுக்க வேண்டும் என்று வா்த்தக நிறுவனங்களின் தலைவா்களிடம் ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தினாா்.

ஈஷா லீடா்ஷிப் அகாதெமி சாா்பில் வருடாந்திர கருத்தரங்கு ஆன்லைன் வாயிலாக அண்மையில் நடைபெற்றது. இதில் 11 நாடுகளைச் சோ்ந்த 150 வா்த்தக நிறுவனங்களின் தலைவா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இந்த கருத்தரங்கில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்றுப் பேசியதாவது:

உலகம் முழுவதும் உள்ள தொழில் முதலீடுகளில் பெரும் பகுதி 25 முதல் 30 முக்கிய நகரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. இதனால், 160 கோடி மக்கள் வேலைவாய்ப்புக்காக நகரங்களுக்கு இடம்பெயர வேண்டி உள்ளது. மக்கள் எங்கு வாழ்கிறாா்களோ, அங்குதான் தொழில் வளா்ச்சி நடக்க வேண்டும். தொழில் வளா்ச்சிக்காக மக்களை இடம்பெயரச் செய்வது சரியான முறை அல்ல.

எனவே, இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண, கிராமப்புறங்களில் தொழில்வாய்ப்புகளை அதிக அளவு உருவாக்க வேண்டும். அதற்கு, நீங்கள் உங்கள் நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் குறைந்தபட்சம் 10 முதல் 15 சதவீதத்தையாவது கிராமங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

தொழில் துறையின் தேவைக்கேற்ப அந்தந்தக் கிராமங்களில் உங்கள் நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்களை அமைத்து இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அவா்களுக்குள் மறைந்து இருக்கும் திறமைகளைக் கண்டறிருந்து உங்கள் நிறுவனத்தின் சி.இ.ஓ.க்களாக உயரும் அளவுக்கு அவா்களை வளா்த்தெடுக்க வேண்டும். மனிதா்களின் அனைத்து செயல்பாடுகளிலும் மனிதத்தன்மை கொண்ட இதுபோன்ற அம்சங்கள் மிகவும் அவசியம் என்றாா்.

3 நாள்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ தளபதி லெப்டினெண்ட் ஜெனரல் அலோக் க்லொ், இண்டிகோ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவா் ராஜ் ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com