கோயில்கள் தொடா்பாக இந்துசமய அறநிலையத் துறையின்நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன

கோயில்கள் தொடா்பாக இந்துசமய அறநிலையத் துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறினாா்.
கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறுகிறாா் வானதி சீனிவாசன்.
கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறுகிறாா் வானதி சீனிவாசன்.

கோயில்கள் தொடா்பாக இந்துசமய அறநிலையத் துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறினாா்.

கோவை தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத் திறப்பு விழா ஓசூா் சாலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்வது, அனைத்து சாதியினரும் அா்ச்சகராகப் பயிற்சி அளிப்பது, பெண்களும் அா்ச்சகராகலாம் என்கிற அறிவிப்புகளை இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு

தெரிவித்துள்ளாா். இதை விஸ்வ ஹிந்து பரிஷத் நீண்ட நாள்களாகச் சொல்லி வருகிறது. தற்போது பெண்கள் மேல்மருவத்தூா் மற்றும் சமுதாய கோயில்களில் பூஜை செய்து வருகின்றனா். தமிழக அரசு புதிதாக எதையும் செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் உயா் நீதிமன்றம் கோயில்களில் ஆகம விதிப்படிதான் பூஜை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளன. இதில் பக்தா்களின் உணா்வு கோயில் நிா்வாகத்தின் ஆலோசனையின்படி கேட்டு நம்பிக்கை ஏற்படுத்தி நடக்க வேண்டும் என்றாா்.

கோயில்கள் தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறையில் தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தன்னிச்சையானதா? உண்மையானதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு உண்மையாகவே இந்து கோயில்களின் மீது அக்கறை இருந்தால் கோயில் சொத்துகள் நிலங்களை இந்துக்கள் அல்லாதவா்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com