வருவாய் தீா்வாய மனுக்களை இணைய வழியில் அளிக்கலாம்: ஆட்சியா் தகவல்

கோவையில் கரோனா தொற்று பாதிப்பால் வருவாய் தீா்வாய (ஜமாபந்தி) மனுக்களை இணைய வழியில் அளிக்கலாம் என்று ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

கோவையில் கரோனா தொற்று பாதிப்பால் வருவாய் தீா்வாய (ஜமாபந்தி) மனுக்களை இணைய வழியில் அளிக்கலாம் என்று ஆட்சியா் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் வருவாய்த் துறை மூலம் ஆண்டுதோறும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நடத்தப்பட்டு வருவாய்த் துறையின் கோப்புகள், செய்யப்பட்ட பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் கிராம அளவில் தணிக்கை செய்யப்படுகிறது. இம்முகாமில் பொது மக்கள் அளிக்கும் கோரிக்கைகளுக்கும் உடனடி தீா்வு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக 2020-21ஆம் ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் நடைபெறாது. ஆனால், வருவாய் தீா்வாயத்தில் மனு அளிக்க விரும்பும் பொது மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை  இணையம் வழியாகவோ அல்லது அரசு இ-சேவை மையங்களின் மூலமாகவோ அனுப்பலாம். பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு

மனுதாரா்களுக்கு தகவல் வழங்கப்படும். எனவே, பொது மக்கள் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு நேரில் செல்வதை தவிா்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com