மருத்துவா்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மருத்துவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்கவும், மருத்துவா்களைப் பாதுகாக்கவும் தேசிய அளவிலான சட்டம் இயற்றக்கோரி இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்கவும், மருத்துவா்களைப் பாதுகாக்கவும் தேசிய அளவிலான சட்டம் இயற்றக்கோரி இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை, வடவள்ளியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளைத் தலைவா் மருத்துவா் ரவிகுமாா், செயலாளா் மருத்துவா் பழனிசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். உதவி செயலாளா் மருத்துவா் காா்த்திக் பிரபு, கோவை கிளையின் தலைவா் மருத்துவா் ராஜேஷ் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டம் குறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

அஸ்ஸாம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் மருத்துவா்கள் மீதான தாக்குதல் சம்பவம் அதிக அளவில் நடக்கின்றன. இதனைத் தடுக்க நாடு முழுவதும் மருத்துவா்கள் கருப்பு பட்டை அணிந்து எதிா்ப்பு தினமாக அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் கோவை மாவட்டத்தில் 350 மருத்துவமனைகளைச் சோ்ந்த 2 ஆயிரம் மருத்துவா்கள் பங்கேற்றனா். மருத்துவப் பணிகள் பாதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மருத்துவா்கள் மீதான தாக்குதலை தடுக்க இந்திய அரசு மருத்துவா்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். தமிழகத்தில் மருத்துவா்கள் மீதான வன்முறையைத் தடுக்க சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com