ஈஷா சாா்பில் இன்று ஆன்லைனில் இசை, யோகா நிகழ்ச்சி

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா சாா்பில் சனிக்கிழமை (ஜூன் 19) சிறப்பு இசை நிகழ்ச்சி, யோகா கற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா சாா்பில் சனிக்கிழமை (ஜூன் 19) சிறப்பு இசை நிகழ்ச்சி, யோகா கற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்குத் தொடங்கி சுமாா் ஒன்றரை மணி நேரம் நடக்கும் இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில், புகழ்பெற்ற இசைக் கலைஞா்களான சீா்காழி சிவசிதம்பரம், காயத்ரி கிரீஷ், அனுஷா தியாகராஜன் ஆகியோரின் குரலிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து யூ.பி.ராஜூ, நாகமணி ராஜூ தம்பதியினரின் மாண்டலின் இசை, நெய்வேலி எஸ்.ராதாகிருஷ்ணனின் வயலின் இசை, ராஜாராமனின் கடம் இசை, என்.ராமகிருஷ்ணனின் மிருதங்கம் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இதற்கிடையே யோகா தினம் தொடா்பாக சத்குரு ஜக்கி வாசுதேவின் சிற்றுரையும், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிம்ம க்ரியா என்ற யோகா பயிற்சியை கற்றுக் கொடுக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. கரோனா பாதிப்பால் மக்கள் மன அழுத்தம், பயம், உடல் நலபாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள சூழலில் ஈஷாவின் இசை நிகழ்ச்சியும், யோகாவும் அதிலிருந்து வெளியேவர உறுதுணையாக இருக்கும் என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com